மஸாயில் நேரம்
அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு சங்கைக்குரிய உலமா பெருமக்களே புதுக்கோட்டை
வட்டாரத்தில் குறிப்பாக புதுக்கோட்டை நகரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மஸாயில் வாசித்தல் என்று ஜும்ஆ
தொழுகை முடிந்த கையோடு சுமார் ஒரு சில நிமிடங்களில் சமூகத்திற்குத் தேவையான சில முக்கிய
செய்திகளை நாம் சொல்லி வருகிற பழக்கம் உண்டு. இது மிகவும் மக்களிடத்தில் போய் சேரவேண்டிய
நேரமாகவும், போய் சேர வேண்டிய செய்தியாகும் இருப்பதால் மிகவும் பயனுள்ளதாக இந்த மஸாயில்
நேரம் இருப்பதால் சங்கைக்குரிய உலமாக்களை கேட்டுக்கொள்வது இதை மாவட்டம் முழுவதும் ஜும்ஆ
தொழுகைக்கு பிறகு வாசித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம் பயானுக்கு வராத
சிலர்களும் அந்த நேரத்தில் பள்ளியில் அமர்ந்து இருக்கிற வாய்ப்பு கிடைப்பதால் குறிப்பாக
ஒரு சில நிமிடமே ஆகக்கூடிய இவைகளை அவர்களுக்கு வாசித்துக் காட்டுவது பயனுள்ளதாக இருக்கும்.
பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக சொல்வது இந்த புதுக்கோட்டை நகரில் அனைவரும் இன்று
ஜும்ஆ தொழுகைக்கு பிறகு என்ன வாசிக்க போகிறார்கள்
என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் உள்ளது. இன்ஷாஅல்லாஹ் புதுக்கோட்டை வட்டார இணையதளத்தின் மூலமாக புதன் அல்லது வியாழக்கிழமையில் புதுக்கோட்டை நகரில்
வாசிக்கப்படுகிற மஸாயிலை வெளியிடுவோம் முடிந்தவர்கள் தேவைப்படுபவர்கள் எடுத்து பயன்பெற
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
கருத்துகள்
கருத்துரையிடுக