பொதுக்குழு தீர்மானம்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
நமது புதுக்கோட்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் 27 -  10 -  2018 சனிக்கிழமை காலை 11 மணியிலிருந்து பேரவையின் தலைவர் மவ்லவி ஹாபிழ்  M. N. சலாஹுத்தீன் யூசுஃபி அவர்களின் தலைமையில் நடைபெற்றது அது சமயம் புதுக்கோட்டை டவுன் அடப்பன் வயல் அஷ்ரஃபிய்யா மஸ்ஜிதின் இமாம் மவ்லவி ஹாபிழ்  A.  அப்துல்லாஹ் பாக்கவி அவர்கள்  கிராஅத் ஓத நமது சபையின் துணைச்செயலாளர் அண்டக்குளம் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி S. அய்யூப் அலி ஃபைஜி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

1.       வழமைபோல் மாதாந்திரக்கூட்டம் நடத்துவது என்றும்
ரபியுல் அவ்வல் மாதம் புத்தாம்பூரில் நடத்துவது என்றும் அதை நமது சபையின் பொருளாளர் மவ்லவி A. சாகுல் ஹமீது முனீரீஅவர்களும் சபையின் துணை செயலாளர் மவ்லவி  S. அய்யூப் அலி ஃபைஜி அவர்களும் புத்தாம்பூர் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாபிழ் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களும் ஆலோசனை குழுவாக செயல் படுவார்கள் என்றும்.

ரபியுல் ஆகிர் மாதம் பெருங்ளூரில் நடத்துவது என்றும் அதற்கு புதுக்கோட்டை டவுன் நூர் பள்ளிவாசல் இமாம் மவ்லவி முஹம்மது எஹ்யா கான் உலவி அவர்களும் நமது சபையின் துணைத்தலைவர் கந்தர்வகோட்டை ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அப்துல் காதர் ஷரீஃப் அன்வாரி அவர்களும் பெருங்ளூர் இமாம் சுல்தான் அகமது கபீர் ஆலிம் அவர்களும் ஆலோசனை குழுவாக செயல் படுவார்கள் என்றும்


ஜமாஅத்துல் அவ்வல் மாதம் வத்தனாக்குறிச்சி அல்லது வாழமங்களத்தில் நடத்துவது என்றும் இக்கூட்டத்திற்கு சபையின் தலைவர் மவ்லவி ஹாபிழ்  M.N. சலாஹுத்தீன் யூசுஃபி அவர்களும் சபையின் செயலாளர் மவ்லவி N. முஹம்மது ஹுசைன் மிஸ்பாஹி அவர்களும் வாழமங்களம் இமாம் மவ்லவி M. சம்சுத்தீன் அரூஸி அவர்களும் ஆலோசனை குழுவாக செயல் படுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

2.       மீலாது விழா மற்றும் கிராஅத் அரங்கம்   2018 டிசம்பர் 02 ஆம் தேதி திருவள்ளுவர் நகர் ஜாமிஆ ஆயிஷா மஸ்ஜிதில் மஃரிபுக்குப் பின் நடத்துவது என்றும் இக்கூட்டத்திற்கு பேச்சாளர்களாக கீழ்கண்டவர்கள்  ஆலோசிக்கப்பட்டு இவர்களில் ஒருவரை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. SS ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்களும், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அன்வர் பாஷா உலவி அவர்களும்,  ஓ எம் அப்துல் காதர் பாக்கவி ஹஜ்ரத் அவர்களும்,  தோப்புத்துறை  KS ஷாகுல் ஹமீத் பாகவி ஹஜ்ரத் அவர்களும் அபூபக்கர் உஸ்மானி  ஹஜ்ரத் வர்களும் ஆலோசிக்கப்பட்டது.

3.       மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் ஒவ்வொரு வட்டாரமும் இரண்டு தேர்தல் குழு பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அடுத்த பொதுக்குழுவில் கொடுப்பது என்ற ஆலோசனைக்கிணங்க நமது வட்டாரத்தின் சார்பில்  நமது சபையின் செயலாளர் மவ்லவி                  N. முஹம்மது ஹுசைன் மிஸ்பாஹி அவர்களும் துணைச்செயலாளர் மவ்லவி S. அய்யூப் அலி ஃபைஜி அவர்களும் தேர்தல் பணி குழுவாக நியமிக்கப்பட்டார்கள்.


4.       நமது சபையின் முன்னாள் தலைவரும் தாருல் உலூம் ஹிக்மதும் பாலிகா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்  மவ்லவி காஜா முகைதீன் அவர்களின் மைத்துனர் ஹாபிழ் முஹம்மது அலி அவர்கள் ஒரு விபத்தில் வஃபாத் ஆனார்கள் அவர்களுக்காக நமது சபையின் சார்பில் யாசீன் ஓதி நமது மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் என் எம் அமானுல்லா இம்தாதி அவர்கள் துஆ செய்தார்கள்.


5.       நமது சபையின் பொருளாளர் மவ்லவி A. சாகுல் ஹமீது முனீரீ அவர்கள் நன்றியுரை வாசிக்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள்

  1. அல்லாஹ் நம் சேவைகளை கபூல் செய்து நமக்கு வெற்றியை தருவானாக! ! !
    ஆமீன். . .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு